கால்வான் மோதலில் உயிரிழந்தவரின் மனைவி இராணுவத்தில இணைகிறார்..?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பல்லத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவரின் மனைவி ஆளுமை மற்றும் நுண்ணறிவு தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் விரைவில் இராணுவத்தில் இணைய உள்ளார்.

கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15, 2020 அன்று சீன வீரர்கள் இரும்பு கம்பி சுற்றப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 40 சீன வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் பீகார் படைப்பிரிவின் 16வது பட்டாலியனை சேர்ந்த நாயக் தீபக் சிங் என்பவரும் ஒருவர். இந்த நிலையில் அவரது மனைவி ரேகா தேவி(23) அலகாபாத்தில் 5 நாள் சேவைகள் தேர்வு வாரிய (SSB) நேர்காணலில் ரேகா தேவி கலந்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை அவர் தேர்வில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டது. அவர் ஆளுமை மற்றும் நுண்ணறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து சென்னையை தளமாக கொண்ட அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) சேர தேர்வாகியுள்ளார்.

நேர்காணலில் தேர்ச்சி பெற்ற பிறகு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) OTA விண்ணப்பதாரர்களுக்கான இறுதி தகுதி பட்டியலை வெளியிட உள்ளது. இராணுவத்தில் வெப்டினன்ட்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அகாடமியில் 9 மாதங்கள் பயிற்சி பெறுவார்கள்.

SSB நேர்காணலுக்கு தகுதி பெற UPSC ஆல் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து போரில் வீரமரணம் அடைந்த மனைவிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நவம்பர் 23, 2021 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து வீர் சக்ரா விருதை பெற்றுகொண்டார். பரம் வீர் சக்ரா மற்றும் மஹா வீர் சக்ராவிற்கு பிறகு இராணுவத்தில் மிக உயர்ந்த மூன்றாவது விருது வீர் சக்ரா ஆகும்.

கால்வானில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், சீன தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கும் மேல் இருக்கலாம் என ஆஸ்திரேலிய பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ரேகா தேவி தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.