அதல பாதாளத்திற்கு செல்லும் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத வீழ்ச்சி..
டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகுறது.
இண்டர் பேங்க் கரன்சி சந்தையில் இன்று டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 173.50 என்ற மதிப்பில் வீழ்ச்சியடைந்துள்ளது. பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த ருபாயின் மதிப்பு பின்னர் வீழ்ச்சியை சந்தித்தது.
திங்களன்று 172.72 என்று இருந்த பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 173.50 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அந்த நாடு சாம்பல் நிற பட்டியலில் உள்ளது. இதனால் உலக வங்கி உட்பட பல நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றன.
மேலும் எந்த வெளிநாட்டு நிறுவனமும் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. இதனால் அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்களை பாகிஸ்தான் அரசு பல வருட குத்தகைக்கு விட்டுள்ளது. இருப்பினும் டாலரின் தேவை அதிகமாக உள்ளது.
Also Read | சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..
தற்போது சீனா மற்றுமே பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் இந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மையையும், வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை கட்டுப்படுத்கவும் பாகிஸ்தான் மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Also Read: கதி சக்தி: அமெரிக்காவில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு..!
ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வோர் ஒரு வருடத்திற்கு அதிக பட்சமாக 6,000 டாலர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 1,000 டாலர் மட்டும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் அனைத்து வெளிநாட்டு நாணய விற்பனை பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 500 டாலருக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் பயோமெட்ரிக் சரிபார்ப்பை நடத்த வேண்டும்.