இறைச்சி விலை உயர்வுக்கு பெண்கள் குட்டை பாவாடை அணிவதே காரணம்- இமாம் குற்றச்சாட்டு

கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு இமாம் நாட்டில் இறைச்சி விலை உயர்வுக்கு பெண்கள் தொடை தெரியும் அளவிற்கு குட்டை பாவாடை அணிவதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இவரின் கருத்துக்கு பெண்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமாம் சதிபகாஸ் டூலோவ், பஜாரில் இறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உங்கள் ஊரில் இறைச்சி விலை எப்போது உயரும் தெரியுமா? உங்கள் பகுதியில் ஒரு பெண்ணின் தோல் மலிவாக மாறும் போது, பெண்களின் தோல் அவள் உடலை காட்ட தொடங்கும் போது மலிவாகிவிடும் என இமாம் தெரிவித்துள்ளார்.

விருது பெற்ற இஸ்லாமிய மதகுருவான சதிபகாஸ் டூலோவ், ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராக பணியாற்றியவர். இந்த அவமானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆண்களை வலியுறுத்திய சதிபகாஸ் டூலோவ், பெண்கள் குட்டை பாவாடை அணிவதை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு பல இஸ்லாமிய நாடுகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இமாம் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும், இமாமுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிர்கிஸ்தான் முஸ்லிம்களின் அரச ஆதரவு ஆன்மீக நிர்வாகத்தின் (DUMK) அதிகாரிகள் கூறுகையில், அவரது கருத்துக்கள் எந்த விதிகளையும் மீறவில்லை. யாருடைய கௌரவத்தையும் கண்ணியத்தையும் அவமதிக்கவில்லை, அரசியலில் தலையிடவில்லை, சதிபகாஸ் டூலோவின் கருத்து பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த இமாம் பெண்களை இழிவுப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். தற்போது கிர்கிஸ்தானில் மொத்த மற்றும் சில்லரை இறைச்சி விலை அதிகரித்து வருவதை குறிப்பிட்டு இமாம் இந்த கருத்தை கூறியுள்ளார். ஜுன் மாதத்தில் ஒரு கிலோ இறைச்சியின் மொத்த விலை 6.78 டாலரான உள்ளது.

ஒரு கிலோ சில்லரை இறைச்சி விலை 7.40 முதல் 8.63 டாலர் வரை உள்ளது. வரும் நாட்களில் இறைச்சி விலை மேலும் உயரும் என கூறப்பட்டுள்ளது. இமாமின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பெண் ஒருவர், பொருளாதார நெருக்கடி மற்றும் மோசமான சாலைகளுக்கு பின்னாலும் பெண்கள் இருக்க வேண்டும் என கிண்டலாக பதிவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பலரும் சமூக ஊடகங்களில் தங்களது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.