உக்ரைன் பற்றி எரியும் நிலையில் மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய உக்ரைன் அதிபர்..!

தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸகி ஃபேஷன் பத்திரிக்கையான வோக் இதழுக்கு போட்டோஷூட் நடத்திய சம்பவம் நெட்டிசன்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 மாதமாக போர் நடைபெற்று வருகிறது. அங்கு உக்ரைன் தரப்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டை விட்டு ஆண்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் வெளியேறி வருகின்றனர்.

ரஷ்ய வீரர்களுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். பல நாடுகள் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் போரினால் நாடே பற்றி எரியும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெவென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெவென்ஸ்கி பற்றிய ஒரு கட்டுரைக்கான இருவரும் போட்டோஷூடு நடத்திய சம்பவம் பலரையும் கோபத்தை தூண்டியுள்ளது.

வோக் பத்திரிக்கை, உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனா ஜெவென்ஸ்கி பற்றி கட்டூரை வெளியிட உள்ளது. அதில் அவரை ஒரு துணிச்சலான பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து கொண்டிருக்கும் போரின் போது அவர் நடத்திய போராட்டம் பற்றியும், அவர் எப்படி திரைக்கு பின்னால் இருந்தார் என்பது பற்றியும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் மனைவி பற்றிய இந்த கட்டுரை பலரிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், குறிப்பிடத்தக்க மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கட்டுரையில் மொத்தம் 5 படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டான காலங்களில் கணவருக்கு துணையாக நின்ற சக்தி வாய்ந்த பெண்ணாக தோற்றமளிக்க இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்ட விதம் குறித்து வோக் பத்திரிக்கை வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் எவ்வாறு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த குடியரசு கட்சி தலைவர் டேவிட் கிக்லியோ கூறுகையில், நான் குழப்பத்தில் இருக்கிறேன், உக்ரேனிய மக்கள் தங்களால் வெல்ல முடியாத ஒரு போரில் சிக்கி தவிக்கின்றனர்.

மேலும் உயிர் காக்கும் தீர்வை நோக்கி செயல்படுவதற்கு பதிலாக வோக் உடன் புகைப்படம் எடுப்பதற்கு ஜெலென்ஸ்கிக்கு நேரம் கிடைத்துள்ளது. ஊடகங்கள் கூறும் உலக தலைவர் இவர்தானா என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் அக்டோபர் 2022 இதழின் வெளியீட்டில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.