உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு.. முதல் 10 இடத்திற்குள் இந்தியா..

பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸின் நிறுவனரும், பில்லியனர் முதலீட்டாளருமான ரே டேலியோ, தனது தொடக்க நாட்டு பவர் ஸ்கோர் குறியீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளது.

பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட் நிறுவனம், நாடுகளை எது ஆரோகியமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் ஆக்குகிறது மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் முடிவுகள் அவர்களின் நாடுகளின் பாதையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது.

பவர் ஸ்கோர் இன்டெக்ஸ் 18 வகையான நிலைகளை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு நாட்டின் கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சி, மக்களின் நாகரிகம், பொருளாதார வெளியீடு, இருப்பு நாணய நிலை, இராணுவம் மற்றும் பல தாக்கங்களின் வலிமையை அளவிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா வலுவான சக்தியாக இருந்தாலும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்காவின் வலுவான மூலதன சந்தைகள் மற்றும் நிதி மையம், கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்பம், வலிமையான இராணுவம், மேம்பட்ட கல்வி, இருப்பு நாணய நிலை, உயர் பொருளாதார வெளியீடு மற்றும் இயற்கை வளங்களின் செல்வம் போன்ற காரணங்கள் அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ளன.

இருப்பினும் அதன் சாதகமற்ற பொருளாதார நிதி நிலை மற்றும் பெரிய உள்நாட்டு மோதல்கள் போன்றவை அதன் பலவீனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. வலுவான சக்தி மற்றும் விரைவான உயர்வு போன்ற காரணங்களால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் பலம், அதன் உள்கட்டமைப்பு மற்றும் மூதலீடு, உலகளாவிய வர்த்தகத்திற்கான அதன் முக்கியத்துவம், அதன் உயர் நிலை கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்பம், மக்களின் தன்னிறைவு மற்றும் வலுவான பணி நெறிமுறை மற்றும் வலுவான இராணுவம் போன்ற காரணங்கள் சீனாவிற்கு சாதகமாக உள்ளன.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

சீனா அதன் பொருளாதார மற்றும் நிதி சுழற்சிகளில் ஓரளவு சாதகமான நிலையில் உள்ளது. இருப்பினும் அதன் உள் கோளாறு குறைந்த ஆபத்து மற்றும் வெளிப்புற கோளாறு ஆபத்து என கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பிய யூனியன், நான்காவது இடத்தில் ஜெர்மனி, ஐந்தாவது இடத்தில் ஜப்பான் மற்றும் ஆறாவது இடத்தில் தென்கொரியா போன்ற நாடுகள் உள்ளன.

Also Read: 10 மாதங்களில் 14 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. உலக வங்கி அறிக்கை..

ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா ஏறுவரிசையில் ஒரு நடுத்தர சக்தியாக உள்ளது. இந்தியாவின் பலங்கள், அதன் வலுவான பொருளாதார மற்றும் நிதி நிலை, அதன் செலவு-போட்டி உழைப்பு ஆகியவை ஆகும். அதன் பலவீனங்கள், மக்கள் தொகையின் அளவு, கல்வியில் பலவீனமான நிலை, ஊழல், சீரற்ற சட்ட விதி, மோசமான கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்பம் ஆகும்.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: IMF

Leave a Reply

Your email address will not be published.