இஸ்ரேலில் வெளியாக உள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. விவேக் அக்னிஹோத்ரி அறிவிப்பு..
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் தற்போது இந்த படம் இஸ்ரேலில் வெளியாக உள்ளதாக ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
மார்ச் 11 அன்று வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் இஸ்ரேலில் ஏப்ரல் 28 அன்று வெளியாக உள்ளதாக விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப்படம் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட உள்ளதாகவும் படக்குழு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Also Read: 27 இந்து கோவில்களை இடித்துதான் குதுப்மினார் மசூதி கட்டப்பட்டுள்ளது: கே.கே.முகமது
விவேக் ரஞ்சன் தனது டிவிட்டர் பக்கத்தில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஏப்ரல் 28 ஆம் தேதி இஸ்ரேலில் வெளியிடப்படுகிறது. TKF போஸ்டரை திறந்துவைக்க எங்கள் ஸ்டுடியோவுக்கு வந்ததற்காக கன்சல் ஜெனரல் காஃபி சொசானி அவர்களுக்கு நன்றி. பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுதல் மற்றும் மனிதநேயத்தை மேம்படுத்துதல் ஆகிய நமது வரவிருக்கும் இலக்கை பகிர்ந்து கொள்வதில் இது ஒரு முக்கிய படியாகும் என தெரிவித்துள்ளார்.
Also Read: ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்..?
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், புனித் இஸ்ஸார், மிருணாள் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிளாக்பஸ்டர் படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் முதலில் இந்தியில் வெளியானது. இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வசூலை குவித்துள்ளது. விரைவில் அனைத்து மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.