நுபுர் சர்மா குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் இறுதி உத்தரவில் இடம்பெறவில்லை..

தனக்கு எதிராக நாடு முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளை இணைத்து டெல்லிக்கு மாற்ற நுபுர் சர்மா மனுதாக்கல் செய்த நிலையில், அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய கருத்துக்கள் இறுதி உத்தரவில் சேர்க்கப்படவில்லை.

முகமது நபியை நுபுர் சர்மா அவமதிததாக இஸ்லாமியகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வரும் நிலையில், உதய்பூரில் கன்ஹையா லால் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு நிபுர் சர்மாதான் காரணம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என குற்றம் சாட்டியிருந்தார்.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, நுபுர் சர்மாவின் மனுவை ஏற்க மறுத்த நிலையில், அதனை வாபஸ் பெற நுபுர் சர்மாவின் வழக்கறிஞருக்கு அனுமதி அளித்தது. நீதிமன்றத்தில் மனு ஏற்கப்படாததால், அமர்வு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதில் நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

முன்னதாக, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு கூறிய கருத்துக்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இஸ்லாமியர்களின் வன்முறைக்கு அவர் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா என கூறி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் நாடு முழுவதும் உணர்ச்சிகளை தூண்டிய விதம், நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு இந்த பெண்மணி மட்டுமே பொறுப்பு என நீதிபதிகள் கூறினர். ஒரே குற்றத்திற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்படும்போது FIR யை இணைப்பது வழக்கம். ஆனால் நுபுர் சர்மாவிற்கு அந்த உரிமை இல்லை.

முகமது நபி குறித்த கருத்து தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், அதனால் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் நீதித்துறை உரிமையை அவர் இழந்து விட்டார் எனவும் அமர்வு கூறியது. இந்த நிலையில் நீதிபதிகள் கூறிய எந்த கருத்தும் இறுதி உத்தரவில் சேர்க்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.