அர்ஜென்டினா உடனான JF-17 ஒப்பந்தத்தை இழக்க நேரிடும். இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் ட்வீட்..

அர்ஜென்டினாவில் பாகிஸ்தான் தூதரகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அர்ஜென்டினா உடனான JF-17 ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இழக்க நேரிடும் என பதிவிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

JF-17 போர் விமானத்தை பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையில் சேவையில் உள்ளது. JF-17 போர் விமானத்தை அஜர்பைஜான், இலங்கை, நைஜீரியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது,

அர்ஜென்டினாவும் பாகிஸ்தானின் JF-17 போர் விமானத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் செப்டம்பரில் அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு சூப்பர்சோனிக் விமானத்தையும் வாங்குவதை மறுத்து அறிக்கையை வெளியிட்டது.

அர்ஜென்டினாவின் பாகிஸ்தான் தூதரகத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் மாற்றமானது, பாகிஸ்தானின் நம்பகத்தன்மை மற்றும் அதனை மீட்டெடுக்க வழிவகுக்கும். இராஜதந்திரிகள் தோல்விகளுக்கு ‘லா ரைசன்’ ஆக முடியாது என பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை தொடர்ந்து அர்ஜென்டினாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது, மேலும் இதுவரை வந்த அனைத்து செய்திகளும் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்தவை அல்ல என அர்ஜென்டினாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளன.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. டிவிட்டர் பக்கத்தில், பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், எவ்வளவு காலம் அரசு அதிகாரிகள் மௌனமாக இருப்பது. கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எவ்வளவு காலம் உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என எதிர்பார்க்கிறீர்கள்.

Also Read: இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை..

கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என அந்த ட்விட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் அடிக்கடி பயன்படுத்தும் “ஆம் நே கப்ரானா நஹின்” என்ற பாடலுடன் இணைக்கப்பட்டு அந்த டிவிட்டர் பதிவு இருந்தது. இந்த பாட்டுக்கு அர்த்தம் “பயப்பட வேண்டாம்” என்பதாகும். செர்பியாவை தொடர்ந்து அர்ஜென்டினா பாகிஸ்தான் தூதரகமும் பாகிஸ்தான் அரசை பற்றி விமர்சித்து இருப்பது இம்ரான்கானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.