இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட INS வேலா நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
கல்வாரி வகையை சேர்ந்த ப்ராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட நான்காவது ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலான INS வேலா நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ப்ராஜக்ட் 75 திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. அதில் INS கரஞ்ச், INS கல்வாரி மற்றும் INS கந்தேரி ஆகிய மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
INS வேலா 2019 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலான INS வாகிர் கடந்த ஆண்டு முதல் சோதனையில் உள்ளது. கடைசி நீர்மூழ்கி கப்பலான INS வாக்ஷீர் தற்போது கட்டுமானத்தில் உள்ளது.
இந்த INS வேலா கப்பல் பிரான்ஸ் நாட்டின் M/s கடற்படை குழு மற்றும் இந்தியாவின் மசகான் டக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மும்பையின் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது.
கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலான INS வேலா டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பலாகும். இதன் நீளம் 67.5 மீட்டர், உயரம் 12.3 மீட்டர், 1957 டன் எடை உடையது. இந்திய கடற்படையில் தற்போது 12 நீர்மூழ்கி கப்பலும், INS அரிகந்த் மற்றும் INS சக்ரா என்ற இரண்டு அணுசக்தியில் இயங்க கூடிய நீர்மூழ்கி கப்பலும் உள்ளன.
Also Read: கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?
இந்த 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் 23,562 கோடியில் கட்டமைக்கப்படுகிறது. இதுதவிர மேலும் டீசல் மற்றும் அணுசக்தியில் இயங்கக்கூடிய 6 நீர்மூழ்கி கப்பலை 50,000 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பதற்கு இந்த ஆண்டு துவக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பதவி உயர்வு..
INS வேலா நீர்மூழ்கி கப்பல் ஆயுதம், சென்சார் உட்பட அனைத்து துறைமுகம் மற்றும் கடல் சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது ஆத்ம நிர்பார் பாரத்தின் மற்றொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. கப்பல் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, உளவு, கண்ணிவெடி இடுதல் மற்றும் கண்காணிப்பு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது.
Also Read: விசாகப்பட்டினம் P15B நாசகார போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது