சீனாவுக்கு எதிராக இந்திய இராணுவம் கே-9 வஜ்ரா ஹோவிட்சரை லடாக் எல்லையில் நிறுத்தியுள்ளது.
எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவம் தனது முதல் கே-9 வச்ரா சுய இயக்க ஹோவிட்சர் ரெஜிமென்டை LAC அருகே நிறுத்தி உள்ளது.
எல் அண்ட் டி நிறுவனம் கே 9 வஜ்ரா ஹோவிட்சர்களை தயாரித்து வழங்ருவதற்காக இந்திய இராணுவத்துடன் 2017 ஆம் ஆண்டு 4,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 100 கே-9 வஜ்ரா ஹோவிட்சர்கள் தயாரிக்கப்பட உள்ளன.
கே-9 வஜ்ரா ஹோவிட்சர்கள் 50 டன் எடை கொண்டது. 47 கிலோ எடைகொண்ட வெடிபொருட்களை 50 கிலோ மீட்டர் வரை செலுத்த முடியும். 42 மாதங்களில் 100 ஹோவிட்சர்கள் இந்திய இராணுவத்திடம் வழங்கப்பட்டு விடும் என எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஹோவிட்சர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த ஹோவிட்சர்கள் பாலைவனம் மற்றும் மலை பகுதி என அனைத்து காலநிலையிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய MRSI வசதியும் உள்ளது. இந்த ஹோவிட்சர் 5 விநாடிக்கு ஒரு இலக்கு என்ற விகிதத்தில் ஒரு நிமிடத்திற்கு 12 முறை தாக்குதல் நடத்க முடியும். 104 முறை தாக்குதல் நடத்தகூடிய அளவுக்கு ஆயுதங்கள் நிரப்ப பட்டிருக்கும்.
Also Read: இந்திய இராணுவத்திற்கு புதிதாக 118 அர்ஜூன் டேங்குகள்.. அனுமதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சகம்..
தற்போது சீனாவும் எல்லையில் பீரங்கி மற்றும் துருப்புகளை எல்லைக்கு நகர்த்தி உள்ளது. அதே நேரத்தில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் எல்லை தொடர்பான முடிவு எட்டப்படவில்லை.
இந்திய இராணுவம் தாக்குதலுக்கு தயாராகவே இருப்பதாக இந்திய இராணுவ தளபதி எம் எம் நரவனே தெரிவித்துள்ளார். லடக்கிற்கு சென்றுள்ள நரவனே பாதுகாப்பு செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்.
Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..