மக்களவையில் கூச்சல்களுக்கு மத்தியில் ‘இந்தியா அண்டார்டிகா மசோதா 2022’ நிறைவேறியது..

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தகோரி எதிர்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் அண்டார்டிக் பிராந்தியத்தில் இந்தியாவால் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு உள்நாட்டு சட்டங்களின் பயன்பாட்டை நீட்டிக்கும் இந்திய அண்டார்டிகா மசோதா 2022 மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவாகும். கூச்சலால் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு இன்று மதியம் 2 மணியளவில் சபை மீண்டும் கூடியது. புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய அண்டார்டிகா மசோதா 2022 யை பரீசிலனைக்கு கொண்டு வந்த நிலையில் அவை பரீசிலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

பின்னர் மசோதான மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஜிதேந்திர சிங், அண்டார்டிக் ஒப்பந்தம் 1959 ல் கையெழுத்தானது, இந்தியா 1983ல் கையெழுத்திட்டது என கூறினார். ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், அண்டார்டிகாவை இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்துவதோ அல்லது வேறு எந்த தவறான நடவடிக்கைக்கும் பயன்படுத்துவது இல்லை என்பதை உறுதி செய்வதாகும்.

மேலும் சுரங்க நடவடிக்கைகள் அல்லது வேறு எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடுப்பதாககும். அண்டார்டிகா எந்த மனிதனின் நிலமும் அல்ல, அந்த நிலத்தை யாரும் அணு வெடிப்புக்கு பயன்படுத்த கூடாது என்பது ஒப்பந்தத்தின் நோக்கம். அங்கு நிறுவனங்கள் உள்ள நாடுகள் காலநிலை மற்றும் புவியியல் தொடர்பான ஆராய்ச்சி அல்லது சோதனைகளுக்கு தங்களை கட்டுப்படுத்தி கொள்வதை உறுதி செய்வதாகும்.

அண்டார்டிகாவில் சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிராந்திய இறையாண்மை மீதான சர்ச்சைகளை ஒதுக்கி வைப்பது ஆகும். அண்டார்டிகா மசோதாவின் முக்கிய நோக்கம், அண்டார்டிகாவிற்கு வருகைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் கண்டத்தில் உள்ளவர்களிடையே ஏற்படக்கூடிய சாத்தியமான மோதல்களுக்கான அடிப்படை விதிகளை அமைப்பதாகும்.

சில கடுமையான மீறல்களுக்கு தண்டனை விதிகளையும் மசோதா பரிந்துரைக்கிறது. இந்த மசோதா உள்நாட்டு சட்டங்களின் பயன்பாட்டை அண்டார்டிகா பிராந்தியத்தில் இந்தியாவால் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்களுக்கும் விரிவுபடுத்த வழிவகுக்கிறது. அண்டார்டிகாவில் இந்தியாவால் மைத்ரி மற்றும் பார்தி ஆகிய இரண்டு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

அங்கு இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன், புவி அறிவியல் செயலாளர் மற்றும் பிற அமைச்சர்களின் பிரதிநிதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.