நான்காவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி கப்பலான INS வேலா.. நவம்பர் 25 முதல் தனது பணியை துவங்க உள்ளது.

இந்திய கடற்படையின் நான்காவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா நாளை முதல் தனது பணியை துவங்க உள்ளது. இதுவரை மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் பணியில் உள்ள நிலையில் நான்காவதாக INS வேலா நீர்மூழ்கி போர்கப்பல் நாளை முதல் இயக்கப்படுகிறது.

இந்திய கடற்படைக்கு ஸ்கார்பின் வகையை அடிப்படையாக கொண்டு மொத்தம் 6 டீசல் எலக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்க திட்டமிடப்பட்டது. பிரான்ஸ் கடற்படையான DCNS குழுவிடம் இருந்து தொழிற்நுட்ப பரிமாற்றம் மூலம் மும்பையில் உள்ள மசகான் டக் ஷிப்பில்டர் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த நீர்மூழ்கி கப்பலில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கார்பியன் வகுப்பு நீர்மூழ்கி கப்பலான INS வேலா, மேற்பரப்பு தாக்குதல், நீர்மூழ்கி தாக்குதல், உளவு சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடி இடுதல் போன்ற பணிகளை செய்யக்கூடியது.

இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் டார்பிடோக்கள் மற்றும் குழாய் மூலம் ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி நீருக்கடியில் மற்றும் மேற்பரப்பு என இரண்டு வகையிலும் தாக்குதல் நடத்த முடியும். இந்த நீர்மூழ்கி கப்பல் 2005ல் அனுமதி வழங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு சோதனை தொடங்கப்பட்டது..

Also Read: ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?

2021 நவம்பர் 9 ஆம் தேதி சோதனை முடிக்கப்பட்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 25 முதல் தனது பணியை தொடங்க உள்ளது. ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி கப்பலில் முதல் நீர்மூழ்கி கப்பல் INS கல்வாரி 2017 ஆம் ஆண்டும், INS கந்தேரி 2019 ஆம் ஆண்டும், INS கரஞ்ச் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.

நான்காவது நீர்மூழ்கி கப்பலான INS வேலா நவம்பர் 25 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலான INS வகிர் துறைமுக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆறாவது நீர்மூழ்கி கப்பலான INS வாக்ஷீர் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. INS வேலா நீர்மூழ்கி கப்பலின் நீளம் 221 அடி, உயரம் 40 அடி, இதன் வேகம் மணிக்கு 37 கிலோமீட்டர். 8 அதிகாரிகள் மற்றும் 35 மாலுமிகள் இதில் இருப்பார்கள்.

Also Read: சீனாவுக்கு போட்டியாக சூர்யகிரண் விமானத்தை ஆளில்லா ட்ரோனாக மாற்ற உள்ள இந்திய இராணுவம்..?

Leave a Reply

Your email address will not be published.