இந்தியாவின் இலகுரக போர் ஹெலிகாப்டரின் முதல் படை பிரிவு பெங்களூரில் நிலைநிறுத்தம்..!

இந்திய இராணுவம் கடந்த மாதம் 1 ஆம் தேதி பெங்களுரில் உள்நாட்டு இலகுரக போர் ஹெலிகாப்டரின் (LCH) முதல் படைப்பிரிவை அமைத்தது. பின்னர் இந்த படைப்பிரிவு கிழக்கு கட்டளைக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் இலகுரக போர் ஹெலிகாப்டரின் ஏழு யூனிட்களை கொண்டுள்ளது. இந்த 7 யூனிட்களிலும் தலா 10 LCH ஹெலிகாப்டர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இவை அனைத்து திபெத் எல்லையான சிக்கிம், அருணாச்சல் பிரதேச கிழக்கு கட்டளைக்கு மாற்றப்பட உள்ளன.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த இலகுரக போர் ஹெலிகாப்டரை வடிவமைத்து கட்டமைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும். காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசம் போன்ற உயரமான இடங்களில் இந்திய இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என கூறப்படும் சியாச்சின் பனிப்பாறைகளிலும் சோதனையின் போது அதிக உயரத்தில் இயங்கும் திறனை LCH நிருபித்துள்ளது. ஆகஸ்ட் 2020ல் கால்வான் மோதலுக்கு பிறகு லடாக்கில் 2 LCH ஹெலிகாடர்கள் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிலைநிறுத்தப்பட்டது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமுறை சக்தி என்ஜின், பிரான்சின் என்ஜின் தயாரிப்பாளரான சஃப்ரானுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. 5.5 டன் எடையுள்ள ஹெலோ 20,000 அடி உயரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பீரங்கி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நிமிடமும் ஆயிரம் 20 மிமீ தோட்டாக்களுடன் லேசான கவசத்தை துளைக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டரின் இருபுறமும் 70 மிமீ ராக்கெட்டுகளை சுமந்து செல்கிறது. பிரான்சின் MBDA நிறுவனத்தின் மிஸ்ட்ரல் வான்-வான் ஏவுகணை இலகுரக போர் ஹெலிகாட்ரில் இருந்து சோதனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் இந்திய விமானப்படையிடம் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக ஹெலிகாப்டரை ஒப்படைத்தார். மார்ச் 2022 ல் இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published.