வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய நெதர்லாந்து MP..

இஸ்லாத்தை புண்படுத்தும் வகையில் ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறி பங்களாதேஷில் வெள்ளிக்கிழமை மாலை நரைல் மாவட்டத்தில் உள்ள சஹாபரா கிராமத்தில் பல இந்துக்களின் வீடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூறையாடினர். மேலும் சில வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

வன்முறையை கலைக்க போலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இரவு 7,30 மணி அளவில் சஹாபரா கிராமத்தில் உள்ள இந்து கோவிலையும் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வணிக வளாகங்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து நெதர்லாந்து MP கீர்ட் வில்டர்ஸ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கீர்ட் வில்டர்ஸ் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து வெளியுறவு மற்றும் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு வில்டர்ஸ் எழுதிய பாராளுமன்ற கேள்விகள், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான வன்முறை தாக்குதல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதில் உங்கள் கருத்து என்ன?

இந்த தாக்குதல்கள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் உங்கள் கருத்து என்ன? வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டு தலங்கள், கடைகள் தீயிட்டு கொளுத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா? பெரும்பான்மையான முஸ்லிம்கள் பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த தாக்குதல்கள் ஏற்றுகொள்ள முடியாதவை என்பதையும், மேற்கத்திய உலகில் அவை மிகவும் குறைவாகவே விளம்பரப்படுத்தப்படுகினறன என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்துப்படி இதற்கு என்ன காரணம்? அதை மாற்ற உதவ தயாரா? இல்லை என்றால், ஏன் இல்லை?

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அடிக்கடி ஊடகங்களில் பரவலாக பதிவாகும் அதேவேளையில் இஸ்லாமியர்களால் ஏற்படும் வன்முறைகள் பெரும்பாலும் துடைத்தெறியப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படியென்றால், இதற்கான விளக்கம் உங்களிடம் உள்ளதா? இல்லை என்றால், ஏன் இல்லை?

நுபுர் சர்மா துணிச்சலாக முகமது பற்றிய உண்மைகளை கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பின்னர் உண்மையை பேசியதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்ற எனது கருத்தை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்களா?

நுபுர் சர்மாவுக்கு உங்கள் ஆதரவை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லையென்றால், ஏன் கூடாது? சமூக ஊடகங்களில் நுபுர் சர்மாவை ஆதரித்த ஒரு இந்து தையல்காரரை இரண்டு முஸ்லிம் ஆண்கள் தலை துண்டித்தது உங்களுக்கு தெரியுமா? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது உங்களுக்கு தெரியுமா? அதில் உங்கள் கருத்து என்ன? சந்தேக நபர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படுமா? இதற்கு என்ன சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?

பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்துக்களை வெளிப்படையாக ஆதரிக்கவும், பங்களாதேஷ் மற்றும் இந்திய அரசாங்கங்களை தொடர்பு கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்கீர்களா? இல்லை என்றால், ஏன் இல்லை? இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களின் வன்முறையை வெளிப்படையாக கண்டிக்க தயாரா?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளின் அரசாங்கங்களிடமும் தங்கள் நாடுகளில் உள்ள இந்துக்களின் சிறந்த பாதுகாப்புக்காக வாதிட நீங்கள் தயாரா? என பல அடுக்கடுக்கான கேள்விகளை நெதர்லாந்து MP பாராளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.