ட்ரோன்களை அழிக்கும் ஆயுதத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ்..

2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று ட்ரோன் காரணமாக சுமார் 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அந்த சிறிய ட்ரோனால் நடக்கவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அது பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

சிவிலியன் ட்ரோன்கள் விலை குறைந்தவை, அவற்றை நகர்ப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் பயன்படுத்த எளிதானது. இதனால் பல சமயங்களில் அச்சுருத்தல் உருவாகின்றன.

பிரான்ஸ் தயாரித்த இந்த ட்ரோன்களை அழிக்கும் மொபைல் கிட் (Chimera) ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் எதிரிகளின் ட்ரோன்களைக் கண்டறிந்து அவற்றின் சமிக்ஞையைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தோள்பட்டை மீது வைத்து பயன்படுத்த முடியும். செர்பேரின்(Cerbair) ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் ஞாயிற்றுக்கிழமை ஐடெக்ஸின் தொடக்க நாளில் 1,00,000 யூரோ என குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த வகையான அச்சுறுத்தல்கள் எங்கிருந்தும் வரலாம் என்று நிறுவனத்தின் விற்பனை மேலாளர் யான் பெர்கர் கூறினார்.

“ட்ரோன்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கொரில்லா கருவி. ஆனால் சிமேரா(Chimera) எளிதானது மற்றும் ஒரு நல்ல வழியில் நம்மை பாதுகாக்க முடியும் என்று பெர்கர் கூறினார்.


எந்த ஒரு வானொலி அலைவரிசைகளையும் ஆண்டெனாவை பயன்படுத்தி சிமேரா வானத்தை ஸ்கேன் செய்து, அதன் தளத்திற்கு தரவை அனுப்புகிறது. எதாவது ஒரு ட்ரோன் கண்டறியப்பட்டால், ஆபரேட்டருக்கு கணினியில் ஆடியோ மற்றும் வீடியோ காட்சியில் எச்சரிக்கை அனுப்பும்.

பின்னர் எதிரி ட்ரோனின் சிக்னலை ஜாம் செய்து தரையில் வீழ்த்தும். சிமேரா எதிரி ட்ரோன் மற்றும் அதன் ஆப்ரேட்டருக்கு இடையேயான தகவல் தொடர்பை துண்டிக்கிறது.

இந்த அமைப்பு மற்ற ட்ரோன்களில் இருந்து வரும் 95 சதவீத அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் பயனுள்ளதாக இருக்கிறது என பெர்கர் கூறினார். இது நேட்டோ “Class 1” அல்லது மைக்ரோ ட்ரோன்ஸ் என்று குறிப்பிடுகிறது.

பிரான்ஸ் இராணுவதில் பணியாற்றும் பெர்கர் கூறுகையில், இந்த ட்ரோன் அச்சுறுத்தல் மிகவும் அதிகரித்து வருகிறது. நான் ஈராக்கில் பணியாற்றியுள்ளேன், பல ஆண்டுகளாக அங்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டிருக்கிறோம், ஏனெனில் இது நிறைய அறிவு அல்லது பணம் இல்லாமல் பயங்கரவாதத்தை கொண்டுவருவதற்கான மலிவான வழியாகும்.

மனிதன் தீங்கிழைக்கும் வழியில் உருவாக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் எதுவும் ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *