இந்தி மொழி தெரிந்த திபெத்தியர்கள், நேபாளிகளை ஆட்சேர்ப்பு செய்து வரும் சீன இராணுவம்..?

சீன இராணுவம் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் இருந்து இந்தி மொழி தெரிந்த திபெத்தியர்கள் மற்றும் நேபாளிகளை ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. இவர்கள் இந்தியா உடனான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் விளக்கம் மற்றும் உளவுத்துறை சேகரிப்பு வேலைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்திய உளவுத்துறை தகவலின்படி, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திபெத் இராணுவ மாவட்ட அதிகாரிகள், இந்தி பட்டதாரிகளை தேடி திபெத் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திபெத் இராணுவ மாவட்டம் சீன இராணுவத்தின் வெஸ்டர்ன் கட்டளையின் கீழ் உள்ளது.

இந்த வெஸ்டர்ன் கட்டளை இந்தியாவன் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற எல்லை பகுதிகளை கண்காணித்து வருகிறது. வெஸ்டர்ன் கட்டளையால் நடத்தப்படும் ஆள்சேர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சீன இராணுவம் அதிக எண்ணிக்கையிலான திபெத்தியர்களை வழக்கமான துருப்புகளாகவோ அல்லது போராளி பிரிவுகளாகவோ சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் பல ஆட்சேர்ப்பு இயக்கங்களை சீன இராணுவம் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன இராணுவத்தில் 7,000 திபெத்திய வீரர்கள் உள்ளனர் மற்றும் அதில் 100 பெண்களும் உள்ளனர். இதில 1,000 திபெத்தியர்கள் சிறப்பு திபெத்திய ராணுவ பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய இராணுவமும் தனது இராணுவ வீரர்களுக்கு திபெத்தின் மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் திபெட்டாலாஜி படிப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறது.

மேலும் சீன மொழியும் பயிற்றுவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய கட்டளையின் கீழ் உள்ள மொழி பள்ளிகளில் சீனாவின் மாண்டரின் மொழியில் பல பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இராணுவம் சீன மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published.