உ.பி.யில் பயங்கரம்; குடிபோதையில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்
உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தில் குடிபோதையில் திருமணமான தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததாக அண்ணன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் டிசம்பர் 23ம் தேதி நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது தங்கை வீட்டுக்கு சென்ற அவர் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குடிபோதையில் இருந்த அவரது நண்பர் இதனை மொபைலில் படம் எடுத்திருக்கிறார். பின்னர், இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
மேலும் அடிக்கடி பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் போலிசில் புகார் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் போலீசுக்கு போக வேண்டாம் என கூறியுள்ளனர். எனினும், துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க முடிவு செய்தார். மொராதாபாத் போலீசார் அவரது சகோதரர் மற்றும் அவரது நண்பர் மீது திங்களன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
தனது புகாரில், தான் நடந்தவற்றை தனது கணவருக்கு தெரிவித்து பின்பு இருவரும் புகார் கொடுக்க விரும்பியதாகவும், ஆனால் குடும்பத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும் என பெற்றோர்கள் தடுத்ததாகவும் அந்த பெண் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது வீட்டிற்கு வெளியே தொடர்ந்து தன்னை பாலியல் தொந்தரவு செய்து மிரட்டியதால் புகார் அளிக்க முடிவு செய்ததாக அந்த பெண் கூறினார்.
SHO சிவில் லைன்ஸ், தர்வேஷ் குமார் கூறுகையில், IPC 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 452 (காயம், தாக்குதல் அல்லது தவறான நோக்கத்துடன் அத்துமீறியிருப்பது), மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்களுக்கு தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாக உள்ளதால் போலிசார் அவர்களை தேடி வருகிறார்கள்.