திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற போலிசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (23) என தெரியவந்துள்ளது.

பின்பு ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலிசார் அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஜெயஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் ஜெயஸ்ரீயின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில் அவர் கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனையடுத்து தங்கதுரையிடம் விசாரணை நடத்தியதில் ஜெயஸ்ரீயை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், தென்னம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் மகள் ஜெயஸ்ரீயும், கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை (25) என்பவரும் வேடசந்தூரில் உள்ள பூலாம்பட்டி ராயல் கிளாசிக் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. தங்கதுரை பல இடங்களுக்கு ஜெயஸ்ரீயுடன் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயஸ்ரீ கேட்டபோது இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என தங்கதுரை கூறியுள்ளார். இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயஸ்ரீ தங்கதுரையிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் ஜெயஸ்ரீயை கொலை செய்ய திட்டமிட்ட தங்கதுரை, 1ஆம் தேதி அன்று ஜெயஸ்ரீயை ஒட்டன்சத்திரம் வருமாறு அழைத்துள்ளார். பின்பு ஜெயஸ்ரீயை வாகரைக்கு அழைத்து சென்ற தங்கதுரை நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஜெயஸ்ரீ உடலை புதருக்குள் வீசி சென்றுள்ளனர். 2 நாட்கள் கழித்து துர்நாற்றம் வீச ஆரமித்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அவரது உறவினர்கள் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயஸ்ரீ உறவினர்கள் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

காதலனே காதலியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *