மத மாற்றத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரம்: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) நாடு தழுவிய அளவில் சட்ட விரோத மதமாற்றத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளது. “தர்ம ரஹ்ஷா அபியான்” என்ற இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் டிசம்பர் 20 முதல் 31 வரை நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை VHP செய்து வருகிறது.

இந்த பிரச்சாரத்தின் கீழ், மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களின் சதிதிட்டங்களை அம்பலப்படுத்த துண்டு பிரசுரங்கள், பொதுகூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக VHP தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக பாஜக, காங்கிரஸ், JD(U), RJD, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், CPI(M), NC உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 327 MPக்களை VHP அணுகியுள்ளது.

மதமாற்ற தடை சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினர். பட்டியலிடப்பட்ட சாதியினரின் மேம்பாட்டுக்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மதம் மாறிய பின்பு அவர்களுக்கு அந்த சலுகைகள் கிடையாது. ஆனால் மதம் மாறிய பின்பும் மிஷினரிகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக VHP குற்றம் சாட்டி உள்ளது.

பிரச்சாரத்தின் நிறைவு நாளான டிசம்பர் 31 அன்று இந்து சமுதாயத்தை வலுபடுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என VHP அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார். மேலும் மற்ற மதத்திற்கு மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குமார் கூறியுள்ளார்.

ஜிகாதி மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அவர்கள் கவர்ச்சி, பயம் அல்லது ஏமாற்றுதல் மூலம் இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள். கவர்ச்சி, பயம் அல்லது ஏமாற்றுதல் மூலம் மதம் மாற்றுவது அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மத சுதந்திரத்திற்கு எதிரானது மற்றும் ஒரு தனி நபரின் கண்ணியத்திற்கு எதிரானது என குமார் தெரிவித்துள்ளார்.

Also Read: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..

மற்ற மதத்திற்கு மாறிய பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் முன்னோர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு வேறு மதத்திற்கு மாறும் பழங்குடியினர் தங்கள் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு முறைகளை கைவிடுகிறார்கள் என குமார் கூறினார்.

Also Read: அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

மேலும் மதமாற்ற தடை சட்டம், மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகள், இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளை மதம் மாறியவர்களுக்கு அளிக்க கூடாது. நாடு மற்றும் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு சட்ட விரோத மதமாற்றம், பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்களுக்குள்ள தொடர்புகள் மற்றும் லவ் ஜிகாத் போன்ற சதித்திட்டங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்களை VHP அணுகும் என குமார் கூறியுள்ளார்.

Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..

வரும் நாட்களில் மதமாற்றத்திற்கு எதிரான எங்கள் இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மத மாற்ற தடை சட்டம் இயற்றி சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதால் சட்ட விரோத மதமாற்றங்கள் மற்றும் லவ் ஜிகாத் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.