சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இருந்து விலகும் தாய்லாந்து..?

வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், பிலிப்பைன்ஸ் வரிசையில் தற்போது தாய்லாந்தும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இருந்து விலக உள்ளது. மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் சீனாவின் அதிவேக ரயில் பாதை திட்டத்தை தாய்லாந்து கைவிடுகிறது.

சீனா இந்தோனேசியாவை இணைக்கும் வகையில் பான்-ஆசியா அதிவேக ரயில் பாதையை லாவோஸ். தாய்லாந்து. மலேசியா. சிங்கபூர் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தோனேசியாவை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நாடுகளுடன் சீனா பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது தென்சீனக்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு மாற்றாக சீனாவின் யுகான் மகாணத்தின் குன்மிங்கிலிருந்து சிங்கப்பூரை ரயில் மூலம் சீனா இணைக்க விரும்புகிறது. இது பாதுகாப்பான போக்குவரத்தாக இருக்கும் என சீனா நம்புகிறது.

தென் சீனக்கடலையும் இந்திய பெருங்கடலையும் தாய்லாந்தில் உள்ள இஸ்த்மஸ் ஆப் க்ரா வழியாக இணைக்கும் 120 கிலோமீட்டர் நீளமுள்ள க்ரா கால்வாய் திட்டத்தை செயல்படுத்த சீனா முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் சீனா தாய்லாந்தை கடன் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி தாய்லாந்து மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் க்ரா கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அடியாக பான்-ஆசிய அதிவேக ரயில் திட்டத்திற்கும் தாய்லாந்து முட்டுகட்டை போட்டுள்ளது. சீனாவின் கனவு திட்டமான பெல்ட் அண்டு ரோட் திட்டம் தாய்லாந்து வழியாக மலேசியா மற்றும் சிங்கபூர் வரை செல்வதால் தாய்லாந்து ஒப்புதல் மிக முக்கியமானது.

ஆனால் தற்போது அதிவேக ரயில் திட்டத்தை தாய்லாந்து காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தாய்லாந்தின் நோங் காய் நகரில் இருந்து பாங்காக் வரையிலான 608 கிலோ மீட்டர் ரயில் இணைப்பு திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த வழி தடத்தில் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கீமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்க சீனா திட்டமிட்டது.

2017 ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில் சீனா விதித்த கடன் நிபந்தனையால் கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மற்றும் சீன தொழிலாளர்களை மட்டுமே கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும் என கூறியதால் தாய்லாந்து அதனை ஏற்கவில்லை.

Also Read: சீனாவில் இருந்து வெளியேறுவதாக ஜப்பானின் சிப் உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு..

இந்த நிலையில் பாங்காக் மற்றும் நாகோன் ராட்சசிமா இடையிலான 253 கிலோமீட்டர் துரத்திற்கு மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் புதிய திட்டத்தை தாய்லாந்து அறிவித்தது. மேலும் சீன-தாய்லாந்து கூட்டு முயற்சி கைவிடப்பட்டு முழு செலவையும் தாய்லாந்து ஏற்பதாக அறிவித்தது.

இதனை சீனா ஏற்காததால் இந்த திட்டம் தற்பொது கிடப்பில் போடப்பட்டுள்ளது. நோங் காய் வரையிலான இரண்டாம் கட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா லாவோஸ் வரை அதிவேக ரயில் பாதையை அமைத்துள்ளது. அங்கிருந்து சிங்கப்பூர் வரை கொண்டு செல்வதில் தற்போது தாய்லாந்து முட்டுகட்டை போட்டுள்ளது.

Also Read: நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

அதுமட்டுமில்லாமல் தாய்லாந்து மற்றும் சீனா இடையே விமான சேவை இருப்பதால் ரயில் சேவை தேவையில்லை என தாய்லாந்து நினைக்கிறது. இதனால் பாங்காக்-நாகோன் ரட்சசிமா ரயில் சேவை 4 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.