சீனாவை நம்பியதால் பொருளாதாரத்தை இழந்த தாய்லாந்து.. விலகி இருக்க முடிவு..

சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டி வரும் தாய்லாந்து தற்போது கொரோனா பெருந்தொற்றால் வருமானம் இன்றி தவித்து வருகிறது. சுற்றுலாவில் சீன பயணிகளே அதிகமாக வந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்தது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் வேறு வழிகளில் வருமானத்தை ஈட்ட தாய்லாந்து முடிவு செய்துள்ளது.

தாய்லாந்து வங்கிகளின் இருப்புநிலை சீன சுற்றுலா பயணிகளை அதிகமாக சார்ந்திருப்பதால் செயல்படாத சொத்துக்களின் (NPAs) எண்ணிகையில் ஏற்றம் கண்டுள்ளன. சீனாவில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடந்த 2014 ஆம் ஆண்டு விசா கட்டணத்தில் இருந்து சீன சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து விலக்கு அளித்தது.

இதன் மூலம் தாய்லாந்தின் சுற்றுலா வருவாய் அதிகரித்தது. தாய்லாந்திற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2012 ல் 2.7 மில்லியனாக இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது தாய்லாந்திற்கு வரும் மொத்த சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் சீன சுற்றுலா பயணிகள் ஆவர்.

Also Read: முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.. ஸ்வீடனுக்கு சீனா எச்சரிக்கை..

ஆனால் கொரோனா தொற்றுநோயால் பயணக்கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் தாய்லாந்தின் சுற்றுலா அடிவாங்கியது. சீனாவில் இருந்து தாய்லாந்திற்கு வருவோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. இதன்மூலம் தாய்லாந்தின் பொருளாதாரம் சீனர்களை அதிகம் நம்பியிருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா 18 சதவீத பங்களிப்பை கொண்ட நிலையில், தற்போது அது 7 சதவீதமாக குறைந்துள்ளது. சமீபத்தில் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (S&P) தாய்லாந்தின் முன்னணி கடன் வழங்குநர்களான சியாம் கமர்ஷியல் வங்கி, காசிகோர்ன் வங்கி மற்றும் க்ருங்தாய் வங்கி ஆகியவற்றின் மதிப்பீட்டை பலவீனமான பொருளாதார மீட்சியை காரணம் காட்டி குறைத்தது.

Also Read: சீனா, சாலமன் தீவு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.. அமெரிக்கா எச்சரிக்கை..

தற்போது தாய்லாந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சீன சுற்றுலா பயணிகளை நம்பியிருப்பதை குறைக்கவும் தாய்லாந்து விரும்புகிறது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். சுற்றுலா தவிர்த்து மற்ற துறையில் கவனம் செலுத்தவும் தாய்லாந்து முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.