இதுவரை இல்லாத வகையில் 44 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்து சாதனை..

2021-22 நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 44.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

கைவினை பொருட்கள் ஏற்றுமதியில், 2021 நிதியாண்டு மற்றும் 2020 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது முறையே 41 சதவீதம் மற்றும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா 27 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் 18 சதவீதமும், வங்கதேசம் 12 சதவீதமும், ஜக்கிய அரபு அமீரகம் 6 சதவீத பங்கை கொண்டுள்ளன.

தயாரிப்பு வகைகளின் அடிப்படையில், பருத்தி ஜவுளி ஏற்றுமதி 2020-21 மற்றும் 2019-20 ஆம் நிதியாண்டுடன் ஓப்பிடுகையில் 2021-22 ஆம் நிதியாண்டில் 54 சதவீதம் மற்றும் 67 சதவீத வளர்ச்சியுடன் 39 சதவீத பங்குகளுடன் 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

Also Read: அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கைக்கு 700 Mn டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..?

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 2020-21 மற்றும் 2019-20 நிதியாண்டுடன் ஓப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் 51 சதவீதம் மற்றும் 18 சதவீத வளர்ச்சியை காட்டும் 36 சதவீத பங்குடன் 16 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஜவுளி ஏற்றுமதி 2020-21 நிதியாண்டு மற்றும் 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் முறையே 51 சதவீதம் மற்றும் 18 சதவீத வளர்ச்சியுடன் 14 பங்குடன் 6.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

Also Read: இந்திய கோதுமையை நிராகரித்த துருக்கி.. இந்தியா திரும்பும் கோதுமை கப்பல்..

கைவினை பொருட்களின் ஏற்றமதி 2020-21 நிதியாண்டு மற்றும் 2019-20 நிதியாண்டுடன் ஓப்பிடுகையில் 2021-22 நிதியாண்டில் 22 சதவீதம் மற்றும் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 5 சதவீத பங்குடன் 2.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு மேலும் கடன் வழங்க சீனா ஒப்புதல்..?

Leave a Reply

Your email address will not be published.