ஜம்மு காஷ்மீரில் போலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் போலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சப் இன்ஸ்பெக்டர் ஃபருக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை இடைபட்ட இரவில் நடத்தப்பட்டுள்ளது. பாம்போர் பகுதியில் உள்ள சம்பூராவில் தனது வீட்டை விட்டு வயல் வெளிக்கு வேலைக்கான நேற்று மாலை உஉஃபருக் அகமது மிர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் நள்ளிரவில் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். உடலில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் நெல் வயல்களில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத கால இடைவெளியில் போலிஸ் அதிகாரியின் மூன்றாவது கொலை ஆகும்.

ஃபருக் அகமது மிர், CTC லெத்போராவில் உள்ள IRP 23வது பட்டாலியனில் OSI ஆக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் நேற்று குல்காமில் பள்ளி ஆசிரியர் ரஜினி பாலா கொலைக்கு காரணமான ஒரு பயங்கரவாதி உட்பட 3 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை இராணுவம் சுட்டுக்கொன்றது.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா உயர்நிலைப்பள்ளியில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி ரஜினி பாலா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இராணுவம் நேற்று சுட்டுக்கொன்றனர். கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல: வி.கே.சிங்

Leave a Reply

Your email address will not be published.