காஷ்மீரில் மற்றொரு இந்து பெண்ணை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்..

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இந்து பள்ளி ஆசிரியை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுவார்கள் என ஜம்மு போலிசார் தெரிவித்துள்ளனர்.

குல்காம் மாவட்டத்தில் இந்து ஆசிரியை மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த இந்து ஆசிரியை சம்பா பகுதியை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி ரஜினி பாலா (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குல்காமின் கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பாதுகாப்பு படையினர் பள்ளியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதியை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா, ஆசிரியர் மீதான தாக்குதல் கேவலமான செயல் என கண்டித்தார்.

ரஜினி ஜம்மு மாகாணத்தின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர். தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பணிபுரியும் ஒரு அரசு ஆசிரியை, வெறுக்கத்தக்க இலக்கு தாக்குதலில் உயிரிழந்தார். எனது இதயம் அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உள்ளது. சரிசெய்ய முடியாத மற்றொரு வீடு வன்முறையால் சேதமடைந்துள்ளது என அப்துல்லா கூறினார்.

Also Read: உலகின் மிகப்பெரிய போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்தை பாதியாக குறைத்தது இந்தியா..

இதேபோல் சமீபத்தில் புத்காம் மாவட்டத்தில் மற்றொரு இந்து பண்டிட்டான அரசு ஊழியர் ராகுல் பட் எனபவரை அவரது அலுவலகத்திலேயே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது அப்பகுதியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. 2010-11 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு தொகுப்பின் கீழ் அவருக்கு எழுத்தர் வேலை கிடைத்தது.

Also Read: மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..

இதேபோல் ஒரு வாரத்திற்கு முன்பு புட்காம் மாவட்டத்தில் 35 வயதான காஷ்மீர் தொலைகாட்சி நடிகை அம்ரீன் பட்டையும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவரது 10 வயது மகன் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தான். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்தியதாக போலிசார் தெரிவித்தனர்.

Also Read: அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்..

Leave a Reply

Your email address will not be published.