காஷ்மீரில் வங்கிக்குள் புகுந்து வங்கி மேலாளரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி வளாகத்திற்குள் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொன்றனர். கடந்த மே 1 ஆம் தேதியில் இருந்து இது எட்டாவது படுகொலை ஆகும். இந்த சம்பவம் காஷ்மீரில் இந்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அரே மோகன்போரா கிளையில் உள்ள எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக விஜய்குமார்(27) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் பணிபுரிந்த வங்கிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டனர்.
பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே விஜயகுமார் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேசிய மாநாடு மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஹனுமங்கரை சேர்ந்த விஜயகுமார், மத்திய அரசு, ஐம்மு காஷ்மீர் நிர்வாகம் பாரத ஸ்டேட் வங்கியின் கோகர்நாக் கிளையில் முன்பு பணியாற்றி வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக பணியில் சேர்ந்தார்.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை, பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படைகள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானை சேர்ந்த விஜயகுமார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் பணிபுரிந்து வந்த ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியை சேர்ந்த விஜய்குமார் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு மன உறுதியை அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..
மேலும் மோடி அரசை தாக்கி பேசிய கெலாட், காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறிவிட்டது. காஷ்மீரில் குடிமக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதிகளால் நமது குடிமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
Also Read: காஷ்மீரில் மற்றொரு இந்து பெண்ணை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்..
இதற்கு முன்பு மே12 அன்று புத்காம் மாவட்டத்தின் சதூரா தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட் சுட்டுக் கொல்லப்பட்டார். மே 31 அன்று ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இந்து பெண் ஆசிரியை ரஜினி பாலா அரசு பள்ளியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று விஜயகுமார் வங்கியில் சுட்டுக்கொல்லப்ட்டுள்ளார்.
Also Read: இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு 3000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை.. ஒப்பந்தம் கையெழுத்தானது..
மே 1 முதல் இதுவரை பொதுமக்கள் எட்டு பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் 3 பேர் போலிசார் மற்ற 5 பேர் பொதுமக்கள். காஷ்மிரில் இந்துக்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இருந்து இந்துக்கள் ஶ்ரீநகருக்கு வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.