ஜம்மு காஷ்மீரின் ஷோப்பியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், காஷ்மீரின் ஷோப்பியானில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற காரை மடக்கி சோதனையிட்ட போது, 2 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து AK ரக துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் காஷ்மீரின் ஷோப்பியான் மாவட்டத்தில் கனிகம் கிராமத்தில் பதுங்கியிருந்த, அல் பாதர் இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேற்று முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில் வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *