பிரதமர் மோடி ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. CISF வீரர் உயிரிழப்பு..

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.25 மணி அளவில் CISF வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்முவின் சத்தா முகாம் அருகே அதிகாலை 4.25 மணி அளவில் 15 CISF வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு CISF வீரர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவின் சுஞ்ச்வான் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பாதுகாப்பு வீரர் உயிரிழந்தார். மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

Also Read: ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்..?

சுஞ்ச்வான் பகுதியில் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் சுஞ்ச்வானில் உள்ள ஜலாலாபாத் பகுதியை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியநிலையில், வீரர்கள் கொடுத்த பதிலடியில் சில பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ISIS அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. கர்நாடகாவை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த NIA..?

இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி நாளை மறுநாள் ஏப்ரல் 24 அன்று ஜம்முவின் சம்பா மாவட்டத்திற்கு வர உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.