அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..
கடந்த வாரம் அருணாச்சல் பிரதேசத்தில் எல்லை கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் வந்த சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பில் சீன தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்த சீன வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய தரப்பில் யாருக்கு பெரிய காயங்கள் இல்லை என கூறப்படுகிறது. லடாக் எல்லை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அருணாச்சல் பிரதேசத்தில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.
இதேபோல் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி 100 சீன வீரர்கள் உத்ராகண்டில் எல்லை கோட்டை கடந்து அங்கு இருந்த பாலத்தை சேதப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அருணாச்சல் பிரதேசத்தின் தவாங்கில் இந்திய சீன வீரர்கள் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. 200 சீன வீரர்கள் அருணாச்சலில் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: அமெரிக்கா சீனா இடையே போர் வரலாம்: முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
இருநாட்டு படைகளும் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அருணாச்சல் பிரதேசத்தை தெற்கு திபெத் என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் அந்த பகுதியை பரபரப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றே எல்லை கடந்து வந்துள்ளனர்.
Also Read: இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு வகையான நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டம்..
கடந்த வருடம் ஜூன் மாதம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். பின்பு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இருதரப்பிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன.
Also Read: சீனாவுக்கு எதிராக இந்திய இராணுவம் கே-9 வஜ்ரா ஹோவிட்சரை லடாக் எல்லையில் நிறுத்தியுள்ளது.