சீனாவுடன் எல்லையில் பதற்றம்.. இலங்கையுடன் போர் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய இராணுவம்..
இந்தியா இலங்கை இடையே எட்டாவது போர் பயிற்சி இலங்கையில் நடைபெற உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, இருநாட்டு இராணுவத்தினரிடையே உறவை மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கம் ஆகும்.
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்துக்கு இடையே அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெறும். இந்த போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவ வீரர்கள் 120 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது.
“மித்ரா சக்தி” என பெயரிடப்பட்ட இந்த போர் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு, தகவல் தொடர்பு, பேரிடர் மீட்பு ஆகியவை அடங்கும். சமீபகாலமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கியதால் சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தது.
மேலும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கையில் உணவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் கொழும்பு துறைமுகத்தில் இரண்டாவது முனையத்தை மேம்படுத்த இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கை துறைமுகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
Also Read: சீனாவுக்கு எதிராக இந்திய இராணுவம் கே-9 வஜ்ரா ஹோவிட்சரை லடாக் எல்லையில் நிறுத்தியுள்ளது.
இதுவரை துறைமுகங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் இதுவே அதிகபட்ச தொகையாகும். சீனாவுடன் லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையுடன் இந்திய இராணுவம் போர் பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
Also Read: சீனாவுக்கு எதிராக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்யும் இந்திய தனியார் நிறுவனம்..
வருடந்தோறும் நடைபெறும் இந்த போர் பயிற்சி கடந்த வருடம் கொரோனா தொற்றால் நடைபெறவில்லை. 2019 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான போர் பயிற்சி மகாராஷ்ட்ராவில் நடைபெற்றது.