ஏர் இந்தியா ஏலத்தில் கலந்து கொள்ளும் டாடா சன்ஸ் மற்றும் அஜய் சிங்..

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு ஏலம் விட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ்ஜெட்டின் அஜய் சிய் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இப்போது இயங்கி கொண்டிருந்தாலும் தினமும் 20 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் நிறுவனத்தின் மொத்த கடன் 60,000 கோடி என கூறப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையால் தான் இந்த நஷ்டம் வந்ததாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றம் சாட்டி உள்ளார்.

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்கையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பல முறை ஏலத்திற்கு அழைப்பு விடுத்தும் யாரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் நிறுவனத்தை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாரும் ஏர் இந்தியாவை வாங்கவில்லை எனில் நிறுவனத்தை இழுத்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இந்த வருடத்திற்குள் முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட்டின் விளம்பரதாரர் அஜய் சிங் இதில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏலத்தின் போது அவர்கள் கலந்து கொல்கின்றனரா இல்லையா என தெரிந்துவிடும். இந்த ஏலத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் பின்வாங்கினால் டாடா குழுமத்திற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *