இந்திய இராணுவத்திற்காக கவச வாகனங்களை தயாரிக்க உள்ள டாடா குழுமம்..
இந்திய இராணுவத்திற்காக கவச வாகனங்களை டாடா குழுமம் தயாரிக்க உள்ளது. பாரத் ஃபோர்ஜ் மற்றும் மகேந்திரா நிறுவனத்திற்கு பிறகு இப்போது டாடா குழுமத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைக்க உள்ளது.
இந்திய இராணுவத்துற்கு 1,300 லைட் ஸ்பெசலிஸ்ட் வாகனங்களை 1,056 கோடி செலவில் தயாரிக்க மகேந்திரா டிபென்ஸ் சிஸ்டம் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் தென்னாப்ரிக்காவை சேர்ந்த பாரமவுண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து 27 M4 கவச வாகனங்களை தயாரித்து வருகிறது.
இதே போல் டாடா குழுமமும் கவச வாகனங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் தயாரிக்க உள்ள 27 கவச வாகனங்களின் விலை 177 கோடி என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரடுமுரடான லடாக் பகுதியில் சீனா உடனான மோதலின் போது சீனா அதிக எண்ணிக்கையிலான வீரர்களை குவித்தது. அதே போல் இந்திய இராணுவமும் வீரர்களை கொண்டு சென்றாலும் லடாக்கிற்கு ஏற்றவாறு வாகனங்களை தயாரிக்க டென்டர் விட்டுள்ளது.
இந்த வாகனமானது IED அச்சுருத்தலை தாங்க கூடியதாக இருக்கும். மேலும் இந்த வாகனத்துடன் இயந்திர துப்பாக்கி, டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என பல ஆயுதங்கள் இதில் உள்ளன.
இந்த திட்டங்கள் அனைத்தும் 2002 ல் கொண்டுவரப்பட்டவை. ஆனால் பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த திட்டம் வேகமெடுத்துள்ளது. சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவம் புதிய தொழிற்நுட்பத்தை இராணுவத்தில் புகுத்தியுள்ளது.
இதன் மூலம் நவீன ஆயுதங்களுடன் சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியும். தரைப்படை மட்டுமில்லாமல் விமானப்படை மற்றும் கடற்படையையும் நவீனமாக்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.