தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை.. விசாரணை குழுவை அமைத்தது NCPCR..

லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பியுள்ளது. இதனை NCPCR தலைவர் பிரியங்க கனோங்கோ தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைபள்ளியில் படித்து வரும் 17 வயது சிறுமி லாவண்யா விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து புகார் வந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ளது.

NCPCR தலைவர் பிரியங்க் கனோங்கோ தலைமையிலான இந்த குழு ஜனவரி 30 மற்றும் 31 அன்று தஞ்சாவூருக்கு வருகை தர உள்ளது. மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் தேசிய ஆணையமே விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என NCPCR தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NCPCR தனது அறிக்கையில், மைனர் சிறுமியை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஆணையத்திற்கு புகார் வந்தது. வீடியோவில் சிறுமி, மதம் மாற மறுத்ததால் கழிப்பறையை சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவுதல், விடுதி அறைகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்ய சொல்லி உள்ளனர்.

இந்த கொடுமையால் மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரண வாக்குமூலத்தின் படி, மதம் மாற மறுத்ததால் பொங்கல் விடுமுறையின் போது வீட்டிற்கு செல்ல விடாமல் தடுக்கப்பட்டார். விடுதியில் அதிக வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்ததாக மாணவி கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் குற்றசாட்டை விசாரிப்பதற்கு பதிலாக வீடியோவை பதிவு செய்தவரை போலிசார் விசாரிக்க முயன்றனர். பின்னர் நீதிமன்றம் தலையீட்டு அவரை தொந்தரவு செய்ய கூடாது என கூறியது. மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற போலீசார் முயற்சிப்பதாக மாணவியின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளியை பாதுகாப்பதற்காக ஊடகங்களும் முயற்சி செய்வதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், ஜனவரி 21 அன்று மாநில டிஜிபிக்கு NCPCR நோட்டீஸ் அனுப்பி உண்மை அறிக்கையை சமர்பிக்கும்படி கேட்டுக்கொண்டது. சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் அறிக்கையின் அடிப்படையில் FIR பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் NCPCR தலைவர் பிரியங்க் கனோங்கோ தஞ்சாவூருக்கு விசாரணைக்காக வர உள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் பெற்றோரை சந்திக்க உள்ளேன். பின்னர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக சம்மந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது, இறந்த மாணவியின் பெற்றோரை சந்திப்பது, மாணவியின் வகுப்பு மாணவர்களுடன் சந்திப்பு, இறப்பதற்கு முன் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், பள்ளி அதிகாரிகள் மற்றும் உள்ளுர் மக்கள் ஆகியோரை சந்திக்க இருப்பதாக NCPCR தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மாநில அரசு ஒத்துழைக்க மறுப்பதால் ஆணையமே விசாரணைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை CBI விசாரணை கோரி இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.