ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்க இந்தியாவிற்கு தாலிபான் விமான போக்குவரத்து அமைச்சர் கடிதம்..

ஆப்கானிஸ்தானிற்கு விமான சேவையை மீண்டும் தொடங்க தாலிபான் அரசு இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததை அடுத்து சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் விமான சேவையை மீண்டும் செயல்பட துவங்கி உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தாலிபான் அறிவித்தது. இதனை அடுத்து இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமாருக்கு தாலிபான் விமான போக்குவரத்து அமைச்சர் அல்ஹாஜ் ஹமீதுல்லா அகுன்சாடாவால் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். கடைசியாக காபூல் விமானநிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அமெரிக்கப்படைகள் மற்றும் பொதுமக்களை தங்களது இராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தனர். இந்தியாவும் தனது குடிமக்களை இராணுவ விமானம் மூலம் மீட்டு வந்தது.

Also Read: இந்தியா எங்களின் மிக முக்கியமான நண்பன்.. சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவை ஆதரிக்கிறோம்: பெலாரஸ்

அதே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். அமெரிக்கப்படைகள் வெளியேறியதை அடுத்து சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

சேதமடைந்த விமானநிலையத்தை கத்தார் உதவியுடன் சரி செய்து உள்ளதாக தாலிபான் தெரிவித்துள்ளது. விமான நிலையம் செயல்பட தொடங்கியதால் சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு விமானங்களை இயக்க வேண்டும் என தாலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

தாலிபான் அரசை இந்தியா இன்னும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று கத்தாரின் தோஹாவில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மற்றும் தாலிபானின் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Also Read: காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..

Leave a Reply

Your email address will not be published.