பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாலிபான் தாக்குதல். இரண்டு வீரர்கள் பலி..

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் அமைதுள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் தத்தா கேல் தெஹ்சில் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உடன் பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் எதிர்தாக்குதல் நடத்தப்பட்டதில் பயங்கரவாதிகள் பின்வாங்கினர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இதனை நடத்தியது தெஹ்ரி-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் TTP ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

தற்போது அந்த அமைப்பை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த சில மாதங்களாகவே தங்கள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட அமைப்பின் தலைவர்களை விடுவிக்ககோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அரசும், தெஜ்ரி-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட நவம்பர் 9 முதல் ஒரு மாதத்திற்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் இராணுவம் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

Also Read: இன்டர்போலின் ஆசியாவிற்கான பிரதிநிதி தேர்தலில் இந்தியா வெற்றி.. சீனாவிற்கு எதிர்ப்பு..

இதற்கு முன்னர் பஜார் பழங்குடியினர் மாவட்டத்தில் இரண்டு வீரர்களையும், டேங்க் மாவட்டத்தில் ஒரு வீரரையும் கொன்றுள்ளனர். தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் பலுசிஸ்தான் மகாணத்திலும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக அங்கு உள்ள கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

TTP என்பது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஒரு தடைசெய்யப்பட்ட தீளிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானின் தாலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தாக்குதல்களில் ஆயிரகணக்கான மக்களை கொன்றுள்ளனர். இவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

Also Read: உலக புகழ் பெற்ற பச்சை கண்களை உடைய ஆப்கன் பெண்.. இத்தாலியில் இருப்பதாக தகவல்.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

Leave a Reply

Your email address will not be published.