பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக 8 ஐஎஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ள தாலிபான்..
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பதுங்கி இருந்த 8 ஐ எஸ் பயங்கரவாதுகளை தாலிபான் கைது செய்துள்ளது. அவர்களை விசாரணைக்காக தாலிபான்கள் சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு மாற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து வருகின்றன. ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் சர்வதேச நாடுகள் தங்களை அங்கிகரிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். பெண்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு, கல்வி போன்ற சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாலிபான்களுக்கு நேர் எதிராக வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் ஐ எஸ் அமைப்பினர். இதுவரை நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தாலிபான்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தாலிபான்களுக்கும் ஐ எஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கடந்த மாதம் தாலிபான் செய்தி தொடர்பாளர் இறந்த தினத்தையொட்டி மசூதியில் பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது நடந்த குண்டுவெடிப்பில் ஒரு தாலிபான் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA..
சில தினங்களுக்கு முன்பு மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ எஸ் அமைப்பினர் தான் காரணம் என தாலிபான்கள் குற்றம் சாட்டினர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருவதால் தாலிபான்கள் கோஸ்ட் மாகாணத்தில் பதுங்கியுள்ள ஐ எஸ் பயங்கரவாதிகள் 8 பேரை கைது செய்துள்ளனர்.
Also Read: ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு.. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி..
அந்த 8 பேரும் மற்றொரு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கலாச்சாரம் மற்றும் தகவல் இயக்குனரகத்தின் தலைவர் ஷபீர் அகமது உஸ்மானி கூறினார். தற்போது கத்தாரில் தாலிபான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் சென்னையில் கைது.. NIA அதிரடி..