F-16V போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைத்த தைவான்.. உச்சகட்ட கோபத்தில் சீனா..

சீனா மற்றும் தைவான் இடையே தற்போது உச்சக்கட்ட மோதல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தைவான் விமானப்படை தற்போது மேம்பட்ட 64 F-16V நான்காம் தலைமுறை போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைத்துள்ளது.

தைவானிடம் ஏற்கனவே 114 F-16 போர் விமானமும் மற்றும் 46 மிராஜ் 2000 போர் விமானமும் உள்ளது. இந்த வகை விமானங்கள் 1990 ஆம் ஆண்டை சேர்ந்தவை. இந்த வகை விமானத்தின் மூலம் சீனாவுடன் போர் புரிய முடியாது. ஏனென்றால் சீனாவிடம் இதை விட மேம்பட்ட விமானங்கள் உள்ளன.

தற்போது அமெரிக்காவிடம் ஐந்தாம் தலைமுறை விமானமான F-35 மற்றும் F-22 விமானமும், ரஷ்யாவிடம் Su-57 ஐந்தாம் தலைமுறை விமானமும், சீனாவிடம் J-20 ஐந்தாம் தலைமுறை போர் விமானமும் உள்ளன. இதில் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானமான F-35 மற்றும் F-22 சேவையில் உள்ளன. ரஷ்யாவின் Su-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என கூறப்பட்டாலும் அவை இன்னும் நிருபிக்கவில்லை.

சீனாவின் J-20 விமானத்தை சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் நான்காம் தலைமுறை விமானம் என்றே கூறுகிறார்கள். அதாவது 4.5 தலைமுறையை சேர்ந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தைவானிடம் இருக்கும் 114 பழைய F-16 விமானத்தில் 64 விமானம் 4.5 ஆம் தலைமுறையை சேர்ந்த F-16V ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து F-16 விமானத்தையும் F-16V போர் விமானமாக மாற்ற உள்ளது. இதுத்தவிர புதிதாக 60 முதல் 70 F-16V போர் விமானங்களை வாங்க உள்ளது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக F-16 போவிமானங்களை கொண்ட நாடாக தைவான் மாறும். F-16V போர் விமானம் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இலக்குகளை கண்காணிக்கும் திறன் கொண்டது.

Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..

மேலும் AESA ரேடார், புதிய மிஷன் கணினி, மின்னணு வார்ஃபேர் தொகுப்பு, தானியங்கி தரை மோதல் தவிர்ப்பு அமைப்பு மற்றும் பல்வேறு காக்பிட் மேம்பாடுகளை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட முதல் 64 F-16V போர் விமானங்களை தைவான் அதிபர் சாய் இங்-வென் நேற்று தைவான் விமானப்படையில் முறைப்படி இணைத்தார்.

Also Read: பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பல் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வழங்கியுள்ள சீனா..

தைவானை அமைதியான முறையில் சீனாவுடன் இணைப்போம் என கூறிய சீனா தற்போது மிகுந்த கோபத்தில் உள்ளது. தைவானுடன் F-16 மறுவடிவமைப்புக்கான திட்டம் முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் அதிபராக இருந்த போது ஒப்பந்தம் கையெழுத்தானது. அவர் சீனாவை கடுமையாக எதிர்த்தார். தற்போது ஜோ பிடனும் அதைதே தொடர்கிறார்.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *