தைவான் ஒரு சுதந்திர நாடு.. சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்லோவேனியா.. அடித்து ஆடும் இந்தியா..

ஸ்லோவேனியா பிரதமர் ஜனேஸ் ஜான்சா திங்களன்று இந்திய அரசு ஒளிபரப்பு நிறுவனமான துர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில், தைவான் சர்வதேச ஜனநாயக தரநிலைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்கும் ஒரு ஜனநாயக நாடு என ஸ்லோவேனிய பிரதமல் துர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திங்களன்று ஸ்லோவேனிய பிரதமர் துர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், தைவான் சர்வதேச சட்டங்களை மதிக்கும் ஒரு ஜனநாயக நாடு, ஸ்லோவேனியா தைவானுடன் பரஸ்பரம் வர்த்தக அலுவலகங்களை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் கூறினார்.

ஸ்லோவேனியாவும் தைவானும் பிரதிநிதிகளை பரிமாரிகொள்வதில் ஈடுபட்டு வருகின்றன. இது துதரகங்களின் மட்டத்தில் இருக்காது, மாறாக பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஏற்கனவே உள்ள அதே மட்டத்தில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கூட்டணிகள் இருந்திருந்தால் முன்னதாகவே வர்த்தக பிரதிநிதி அலுவலகங்களை திறந்து இருப்போம். தைவான் மக்களின் இறையான்மையை ஸ்லோவேனியா மதிக்கிறது. உண்மையில் தைவானுடன் எங்களுக்கு இயல்பான உறவு உள்ளது. தான் தைவானுக்கு நான்கைந்து முறை சென்றிருப்பதாக ஜான்சா கூறினார்.

தைவானியர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமைகளை பெற்றிருக்க வேண்டும் என தான் நினைப்பதாக கூறிய பிரதமர், அவர்கள் சீனாவில் சேர விரும்பினால் எந்த அழுத்தமும் இல்லாமல் எவ்விதமான இராணுவ தலையீடும் இல்லாமல் அச்சுருத்தலும் இல்லாமல் தற்போது ஹாங்காங்கில் நடப்பது போல் மூலோபாய ஏமாற்றமின்றி அவர்களின் சுதந்திரமான விருப்பமாக இருந்தால் நாங்கள் அதனை ஆதரிப்போம் என ஜான்சா கூறினார்.

அதிகார சமநிலைக்கு உத்தரவாதம் அளிக்க இந்தியா இங்கு ஒரு முக்கியமான காரணி என குறிப்பிட்ட ஜான்சா, தைவான் WHOவில் சேரும் முயற்சியை வரவேற்றார். தைவான் இந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது சீனாவிற்கு நன்மை பயக்கும் என அவர் தெரிவித்தார்.

தைவானின் செய்தி தொடர்பாளர் ஜோன்னே ஓ நேற்று தைபேயில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில், ஸ்லோவேனியா அரசு தனது பிரதிநிதி அலுவலகத்தை தைவானில் திறக்கும் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும் ஜான்சாவின் கருத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் ஜான்சா தைவானின் நல்ல நண்பர், அவர் பல முறை தைவானிற்க வந்துள்ளார். சர்வதேச பிரச்சனைகளில் உண்மையை பேசியதற்காக அவருக்கு நன்றி என ஜோன்னே தெரிவித்தார்.

Also Read: சீனாவிற்கு செல்லும் எரிவாயு கப்பல்களை ஐரோப்பாவிற்கு திருப்பும் பிரான்ஸ்..

ஸ்லோவேனிய பிரதமரின் கருத்துக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், தைவான் அலுவலகத்தை திறக்கும் ஸ்லோவெனியா பிரதமரின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இது ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கும் என தெரிவித்துள்ளார்.

சீனா என்ற பெயரில் உலகில் ஒரே ஒரு இறையாண்மை கொண்ட நாடு மட்டுமே உள்ளது, பெய்ஜிங்கின் நிலைபாடு ஒரு சீனா கொள்கையாகும். அதில் சுயமாக ஆளப்படும் தைவானையும் உள்டக்கியது. ஒரு சீன கொள்கைக்கு சவால் விடும் மற்றும் தைவான் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஸ்லோவேனியா தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம் என ஜாவோ தெரிவித்துள்ளார்.

Also Read : ஹமாஸுக்கு எதிராக கொலையாளி டால்பின்கள் மூலம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்..

இந்திய தொலைகாட்சியின் நடவடிக்கை சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீனா மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கலாம். சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தைவான் பிரச்சனையை எடுத்துள்ளது ஒரு புத்திசாலிதனமான நடவடிக்கை என சர்வதேச அளவில் கூறப்படுகிறது. இந்திய தொலைகாட்சியின் இந்த பேட்டியால் ஸ்லோவேனியா மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.