நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் … Read more

அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நெம்மேலியில் ₹2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது,  “எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக, பிரமாண்டமாக செய்யக்கூடியவர். அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்’| அதிகப்படியான நகரமயமாக்கல் வசதிகள் கொண்ட … Read more

“தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம்” – முதல்வர் ஸ்டாலின்

அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (23-02-2024), காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டக்   செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் … Read more

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் அவர்களின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி மறைவையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது … Read more

‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை தொடங்கும் திமுக!

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை திமுக தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது , அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிந்துள்ளது; 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்; பிப்.26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக … Read more

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடுக – தினகரன் வலியுறுத்தல்

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் யடிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,  திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது – போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு … Read more

மணற்கேணி இணையத்தளத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ் காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையத்தளத்தினை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம். மணற்கேணி இணையதளத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்தும் செயல்திட்டத்தை நமது பள்ளிக் … Read more

நாளை திமுக கலந்தாலோசனைக் கூட்டம் கூடுகிறது

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை(பிப்.23) காலை நடைபெறுகிறது. இதுதொடர்பாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22ம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் … Read more

கடந்த 19ஆம் தேதி  நிதிநிலை அறிக்கையும, நேற்று முன்தினம்  வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த 19ஆம் தேதி  நிதிநிலை அறிக்கையும, நேற்று முன்தினம்  வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப்.22) நிறைவுபெறுகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி – விசாரணை குழுக்கள் அமைப்பு

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையிலான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அடங்கிய பல ஏக்கர் பரப்பிலான நிலங்கள் மோசடி பத்திரப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களது பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் பதிவுத்துறையில் பணியாற்றும் பல்வேறு … Read more