10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ₹30 இலட்சம் ஒதுக்கீடு!

2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் இதோ:-  விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு பயறு பெருக்குத் திட்டத்தை 4.75 லட்சம் ஏக்கரில் செயல்படுத்த ரூ.40.27 கோடி ஒதுக்கீடு ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.5  லட்சம் நிதியில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் … Read more

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்ற வரும் நிலையில் நேற்று 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.  இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  குறிப்பாக அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் … Read more

“நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு அது நாளை முதல் நனவாக வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

இன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு அது நாளை முதல் நனவாக வேண்டும்  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் … Read more

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம்!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய நிலையில், இவ்விவகாரம் குறித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடு தான் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம். தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டிற்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். … Read more

வெற்று கட்டுக்கதையே திமுக அரசின் ஆளுநர் உரை – தினகரன் விமர்சனம்

மக்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளோ, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களோ இல்லாத வெற்று கட்டுக்கதையே திமுக அரசின் ஆளுநர் உரை என்று தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் மரபு. நீண்ட கால மரபை மீற வலியுறுத்தியதோடு, ஏற்கனவே ஒப்புதல் அளித்த தன் உரையை … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் ரவி விளக்கம்!

 அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில்தான் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி  உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து … Read more

தமிழக அரசு – ஆளுனர் மோதல் தொடரக்கூடாது : அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுனர் உரையில்  இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார்.  அதுமட்டுமின்றி, ஆளுனரின் … Read more

கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் – முத்தரசன் கண்டனம்!!

ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை. வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்ற பேரவையில் உரையாற்றி … Read more

“திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது” – அமைச்சர் உதயநிதி

நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் – திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் – சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம். … Read more