தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.  சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் தொழிற்சாலை … Read more

தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ளது. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை … Read more

வங்க கடலோரம் வருக உடன்பிறப்பே – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்ன் மடல் எழுதியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,  எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தன் மரணத்திலும் போராளியாக – சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி … Read more

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார். தமிழகத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் பிரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.  இந்த நிலையில், … Read more

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் … Read more

அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நெம்மேலியில் ₹2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது,  “எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக, பிரமாண்டமாக செய்யக்கூடியவர். அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்’| அதிகப்படியான நகரமயமாக்கல் வசதிகள் கொண்ட … Read more

1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டிகள் அமைத்திட முதலமைச்சர் அனுமதி!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டிகள் ரூபாய் 294.83 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். 1. ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி, அதன் மூலம் … Read more

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் அவர்களின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி மறைவையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது … Read more

‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை தொடங்கும் திமுக!

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை திமுக தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது , அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிந்துள்ளது; 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்; பிப்.26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக … Read more

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடுக – தினகரன் வலியுறுத்தல்

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் யடிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,  திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது – போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு … Read more