சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன்

2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில்  சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, சரக்கு மற்றும் … Read more

தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக வரும் செய்திகளுக்கு சிபிஐ(எம்) மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கி கணக்கையும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து … Read more

தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

 தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சிபிஐ(எம்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் (11.02.2024) கடிதம் அளித்துள்ளார்.  அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பொருள் :      அதிமுக அரசு நீக்கிய “தமிழ்நாடு விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை”மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை கோருதல் தொடர்பாக வணக்கம்.     … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.                 இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுதுறையிலிருந்து தமிழக மீனவர்கள் ஐந்து பேர் பிப்ரவரி 2, 2024 அன்று  நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி … Read more

வருகிற 8ஆம் தேதி ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து சிபிஐ (எம்) கண்டன ஆர்ப்பாட்டம்!

  தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று  மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் … Read more

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்- தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட செய்திக்காக இரண்டு நாட்களாக பின் தொடர்ந்த அடையாளம் … Read more

“அரசியல் ஆதாயத்திற்காகவே ராமர் கோவில் விழா நடத்தப்படுகிறது” – கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அரசியல் சாசனப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர், மதச் சார்புள்ள நிகழ்வை நடத்துகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மாமேதை லெனின் நினைவு தின நூற்றாண்டு நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றி வைத்து, மாமே தை லெனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கே. பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , பிரதமர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ … Read more