“வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், விளைநிலங்களைப் பாதுகாக்கவும், பொது மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, வனப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க, யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வனப்பகுதியில் வாழும் மக்களை, விளைநிலங்களை, பயணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை … Read more

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு, தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு செல்லும் நிலைக்கு செயல்படுவது நியாயமில்லை. சமவேலைக்கு சம … Read more

“சைக்கிள் சின்னத்தை பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அணுகுவோம்” – ஜி.கே. வாசன்

எந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் அதில் த.மா.கா., முக்கிய கட்சியாக செயல்படும். என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைக்கிள் சின்னத்தை பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அணுகுவோம். இண்டியா கூட்டணியின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம்.  கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளோடு தற்போதும் தோழமையுடன் இருந்து வருகிறோம்.  எந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் … Read more

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் 2024-25 – நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை … Read more

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்

தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தலைப்பின் கீழ் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும், 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் … Read more

இன்சாட் 3DS செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ

வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ள இஸ்ரோவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் INSAT-3DS என்ற அதிநவீன செயற்கைக் கோளை GSLV-F14 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து  இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.   #இஸ்ரோ … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – ஜி.கே.வாசன் இரங்கல்!

பட்டாசு ஆலைக்கு உரிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில்  செயல்பட்டு வரும்  பட்டாசு ஆலையில்  இன்று ஏற்பட்ட  வெடி விபத்தில்  5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி  உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக … Read more

“ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை தேவை” – ஜி.கே.வாசன்

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கு  உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும் காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய … Read more

ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடு தான் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம். தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டிற்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். … Read more

“வெற்றி துரைசாமி உயிரிழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது” – ஜி.கே.வாசன் இரங்கல்

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு  ஜி.கே.வாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இளம் வயதிலேயே அவரது உயிரிழப்பு அவரது தந்தைக்கும், … Read more