வெற்றி துரைசாமி மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவுக்கு முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை.சா.துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி (45) உடல் நேற்று (12.02.2024) சட்லஜ் நதியில் எடுக்கப்பட்ட நெஞ்சை பிளக்கும் செய்தி அறிந்து வேதனையுற்றோம்.வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலம், மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை படம் எடுக்க சென்ற நேரத்தில் … Read more

மனிதர்களை மதம் சார்ந்து பிளவு படுத்தும் தீர்ப்பு – உடனடியாக மேல்முறையீடு செய்க!!

ஆன்மிக வரலாற்று மரபுகளை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு சமூகத்தில் பகைமை வளர்க்கும் பிளவு சக்திகளை ஊக்கப்படுத்தும் பேராபத்தானது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நேற்று முன்தினம் (30.01.2024) இந்து சமய கோவில்களில் இந்து சமயம் சாராதவர்களை அனுமதிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சமய எல்லைகள் கடந்து … Read more

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம்!!

நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று (24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செய்தியாளர் கோவை தனியார் … Read more

ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்- முத்தரசன்

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (26.01.2024) நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை அழைப்புக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், அதேசமயம் நாட்டின் விடுதலை போராட்ட வரலாற்றை புரட்டி பேசுவதும், அறிஞர் உலகம் ஒரு ஆயிரம் ஆண்டில் … Read more

காந்தி இல்லை.. நேதாஜியே சுதந்திரத்திற்கு காரணம்! ஆளுநரின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் நிகழ்வுக்கு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டுள்ளார். விழாவில் பங்கேற்று பேசிய ஆர்.என்.ரவி, விடுதலை … Read more