“தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம்” – முதல்வர் ஸ்டாலின்

அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (23-02-2024), காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டக்   செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் … Read more

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.  காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் காணொலி … Read more

அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதியுதவி

விழுப்பரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விழுப்பரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம். மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று (21.2.2024) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து சாலை வளைவைக் … Read more

“பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!” – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்! “தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?” எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் … Read more

மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 பிரபல சட்ட நிபுணரும் மூத்த வழக்கறிஞருமான பாலி நரிமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான திரு #ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். Deeply saddened to hear about the passing away of eminent constitutional jurist and former Additional Solicitor General of India, … Read more

“நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு அது நாளை முதல் நனவாக வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

இன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு அது நாளை முதல் நனவாக வேண்டும்  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் … Read more

"உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்" – முதல்வர் ஸ்டாலின்

உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாத ஐயர் தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். … Read more

அடுத்த 2 ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் ஸ்டாலின்

மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.2.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வரின் முகவரி … Read more

“மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது மக்களுடன் முதல்வர் திட்டம்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்! ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச் செய்திகளில் பார்த்தேன். ஊடகங்களின் பாராட்டைப் … Read more

கயல் தினகரன் மறைவு கழகத்துக்குப் பேரிழப்பாகும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொள்கை விளக்காக ஒளிவீசிய நமது கழக இலக்கிய அணியின் மாநில இணைச் செயலாளர் திரு. கயல் தினகரன் அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி வந்தடைந்தது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. பகுத்தறிவு கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு திராவிடக் கருத்தியலை உள்வாங்கி கழகமே தன் மூச்சென செயல்பட்ட முன்னோடிதான் நமது கயல் தினகரன் … Read more