இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு, தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு செல்லும் நிலைக்கு செயல்படுவது நியாயமில்லை. சமவேலைக்கு சம … Read more

“ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை தேவை” – ஜி.கே.வாசன்

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கு  உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும் காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய … Read more

ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடு தான் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம். தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டிற்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். … Read more

“வெற்றி துரைசாமி உயிரிழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது” – ஜி.கே.வாசன் இரங்கல்

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு  ஜி.கே.வாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இளம் வயதிலேயே அவரது உயிரிழப்பு அவரது தந்தைக்கும், … Read more

“தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜி.கே.வாசன்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்த … Read more

பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு?- ஜி.கே. வாசன்

பாஜக- அதிமுக கூட்டணியில் சலசலப்பு, கருத்து வேறுபாடு சகஜம் என என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டல் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமாக தேர்தல் கூட்டணி குறித்து சரியான காலத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஒவ்வொரு கட்சியும் குழு அமைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு கட்சியும் எதிரியை வீழ்த்த இறுதி நேரத்தில் உரிய முடிவு … Read more

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பத்ம விருதுகள்

மறைந்த நடிகர், கேப்டன் விஜயகாந்த் உட்பட பத்ம விருதுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பல்வேறு துறையில் சாதனைப்படைத்தவர்களுக்கு 2024 -ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில் போன்ற அனைத்து துறைகளில் … Read more

"சிறந்த பின்னணிப்பாடகியை இசையுலகமும், திரைத்துறையும் இழந்திருக்கிறது" – ஜி.கே.வாசன் இரங்கல்!!

பவதாரணியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பவதாரணியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பவதாரணி அவர்கள் உடல்நலன் குன்றி இலங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.தனித்துவமான இனிய குரல்வளத்தால் பல பாடல்களைப் … Read more

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டதிட்டங்கள் தேவை – ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சட்டதிட்டங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சட்டதிட்டங்களையும் பயன்படுத்த வேண்டும். நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் சம்பந்தமாக பத்திரிகையாளர் மன்றம் விடுத்திருக்கின்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  தாக்கப்பட்டுள்ள நியூஸ் … Read more

தேசிய வாக்காளர் தினம் – ஜி.கே.வாசன் வாழ்த்து

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஜி.கே.வாசன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்காளர்களுக்கிடையே விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. வாக்காளர் ஒவ்வொருவரும் இந்தியாவை கட்டமைக்கும் தூண்கள். அவர்கள் தம் வாக்கின் மூலம் தாம் விரும்பும், சிறந்த, வலுவான, நேர்மையான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆட்சியை ஏற்படுத்த முடியும். … Read more