சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன்

2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில்  சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, சரக்கு மற்றும் … Read more

தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக வரும் செய்திகளுக்கு சிபிஐ(எம்) மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கி கணக்கையும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து … Read more

தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

 தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சிபிஐ(எம்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் (11.02.2024) கடிதம் அளித்துள்ளார்.  அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பொருள் :      அதிமுக அரசு நீக்கிய “தமிழ்நாடு விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை”மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை கோருதல் தொடர்பாக வணக்கம்.     … Read more

கோவில் வழிபாடு- மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும்: கே.பாலகிருஷ்ணன்

கோவில் வழிபாட்டுக்கான கட்டுப்பாடு மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும். ஆகவே நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிபிஐ (எம்)மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பழனி முருகன் கோவிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் அந்த கோவில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்கள் அனைத்திற்கும் … Read more

வெந்ததை தின்று வாய்க்கு வந்ததை பேசும் ஆளுநர் ரவி! கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

வெண்மணி தியாக நெருப்புக்கு அழுக்கு பூச நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி, காரல் மார்க்ஸ் என தமிழக, இந்திய, உலகு தழுவிய செழுமையான மரபுகளையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஆர்.என். ரவி தற்போது வெண்மணி தியாகிகளை குறிவைத்திருக்கிறார். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.என். ரவி அவரது தத்துவத்தின் படி எங்காவது சென்றிருக்க வேண்டுமென்றால் அது 44 … Read more

இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக- கே.பாலகிருஷ்ணன்

இறுதி வரைவு வழிகாட்டுதலில் இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் அந்தப்பகுதியை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக்கழக மானியக்குழு சமூக நீதியை அடியோடு குழி தோண்டிப் புதைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்த இறுதி வரைவு வழிகாட்டுதல் வன்மையான கண்டனத்திற்குரியது. அது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கம் போதுமானதல்ல. இறுதி … Read more

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்- தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட செய்திக்காக இரண்டு நாட்களாக பின் தொடர்ந்த அடையாளம் … Read more

ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு – கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் தேனீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தேனீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை ! இப்போது நடைமுறையில் இருந்துவரும் ஆளுநர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. ஒன்றிய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தேனீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை … Read more

“அரசியல் ஆதாயத்திற்காகவே ராமர் கோவில் விழா நடத்தப்படுகிறது” – கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அரசியல் சாசனப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர், மதச் சார்புள்ள நிகழ்வை நடத்துகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மாமேதை லெனின் நினைவு தின நூற்றாண்டு நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றி வைத்து, மாமே தை லெனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கே. பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , பிரதமர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ … Read more