ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் அரசின் முறையற்ற செயல்பாடு தான் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம். தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டிற்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். … Read more

தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை – அமைச்சர் சட்டத்துறை ரகுபதி

தென் மாநில ஆளுநர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி  உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் … Read more

“திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது” – அமைச்சர் உதயநிதி

நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் – திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் – சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம். … Read more