பொது இடங்களில் புர்கா அணிய தடை.. 51.21% பேர் ஆதரவு..

சுவிட்சர்லாந்தில் பொது இடத்தில் புர்கா அணிவதை தடை விதிக்கும் சட்டத்திற்கு 51.21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மொத்த மக்கள் தொகையில் 5.5% பேர் இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் புர்கா தீவிரவாத அடையாளம் எனவும், இதனால் நாட்டில் பல பிரச்சனைகள் நடப்பதாகவும் சுவிட்சர்லாந்து கூறியுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை கிடையாது என அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 14,26,991 பேர் வாகளித்துள்ளனர். எதிராக 13,59,620 பேர் வாக்களித்துள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் இப்போது புர்காவுக்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க் போன்ற நாடுகள் புர்காவிற்கு தடை விதித்துள்ளன.

பொது இடங்களில் இந்த தடையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுவிஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களை அடுத்து இப்போது பல நாடுகள் புர்காவிற்கு தடை விதித்துள்ளன.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதால் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *