பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு..

நாட்டில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்துவது தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது. அடுத்த நான்கு வாரத்திற்குள் தனது பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரேமாதிரியான விவகாரத்து சட்டங்கள், பெண்களுக்கு ஒரே சீரான பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்ககோரி இரண்டு தனித்தனி வழக்குகளை உச்சநீதிமன்றம் விராரணை நடத்தியது. இந்த பொதுநல வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்துவது தொடர்பாகவும் பதில் மனுவை தாக்கல் செய்ய கோரியது.

இந்த நிலையில் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்யாமல் மேலும் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெஞ்ச் இடமாற்ற மனுக்களை அனுமதித்தது.

மேகாலயா மற்றும் ஒடிசா உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைக்க உத்தரவிட்டது. மனுதாரர்கள் தங்கள் மனுவில், கோவாவில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் அதனை அமல் படுத்த வேண்டும் என கூறி இருந்தனர்.

Also Read: இந்தியாவில் 5 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பிறகு 21 பங்களாதேஷிகள் சொந்த ஊர் திரும்பினர்..

மேலும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சீரான பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்து, பௌத்த, சீக்கிய மற்றும் ஜெயின் சமூகத்தினர் இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956 ஆல் நிர்வகிக்கப்படுகின்றன.

Also Read: பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்ட சிறிது தூரத்தில் பாகிஸ்தான் படகை கைப்பற்றிய BSF..

இஸ்லாமியர்கள் முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986 மற்றும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர் விவகாரத்து சட்டம் 1869 மற்றும் பார்சிகள் பார்சி திருமணம் மற்றும் விவகாரத்து சட்டம் 1936 ன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் அனைவருக்கும் பொதுவாக UCC சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு, ஒரே மாதிரியான சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்து வரும் இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாக பதில் மனு தாக்கல் செய்தது.

Also Read: திரிகோணமலையின் எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா.. ஒப்பந்தம் கையெழுத்தானது..?

Leave a Reply

Your email address will not be published.