Su-30MKI விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்..!

இந்திய விமானப்படை இன்று பிரம்மோஸ் குருஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படை இன்று Su-30 MKI போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் குருஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வரம்பை முதன்முதலாக சோதனை செய்தது. விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை திட்டமிட்டப்படி வங்காள விரிகுடாவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதன் மூலம் Su-30 MKI போர் விமானத்தில் இருந்து நிலம் மற்றும் கடல் இலக்குகளுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல்களை நடத்த முடியும். இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, DRDO. BAPL மற்றும் HAL ஆகியவற்றின் அர்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Also Read: ரஷ்யா உக்ரைன் மோதல்: கிடப்பில் போடப்பட்ட Su-30 MKI போர் விமான திட்டம்..

Su-30 MKI போர் விமானத்தின் உயர் செயல்திறனுடன் இணைந்த ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வரம்பு திறன் இந்திய விமானப்படைக்கு ஒரு மூலோபாய அணுகலை வழங்கும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது.

300 கிலோ வரை வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை மேக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்கக்கூடியது. பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 450 கிமீ மற்றும் 600 கிமீ வரை நீட்டிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.